கல்மதில் புரண்டதும் வழி தோன்றிற்றே

கல்மதில் புரண்டதும் வழி தோன்றிற்றே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

1.         கல்மதில் புரண்டதும் வழி தோன்றிற்றே

            கட்டுகள் அகன்றதும் விழி மின்னிற்றே

            தாழ்ப்பாள்கள் கழன்றதும் ஒளி வந்ததே

            மீண்டுமாய் எழுந்திட்டாரே

                         

                        மரித்த இயேசு உயிர்த்தார்

                        தோல்வியல்ல ஜெயமே

                        அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவோம்

                        உயிர்த்த இயேசு தந்தார்

                        முடிவு அல்ல முதலே

                        அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

 

2.         வீழ்ந்தாலும் எழும்புவோம் ஜெய வீரராய்

            தாழ்ந்தாலும் உயருவோம் புது அலையாய்

            சோர்ந்தாலும் கழுகுபோல் பெலனடைவோம்

            சாய்ந்தாலும் நிமிர்ந்திடுவோம்

 

3.         வறண்டாலும் செழிப்பாவோம் லீபனோனைப் போல்

            தோற்றாலும் சாதிப்போம் யோசேப்பைப்போல்

            இடிந்தாலும் அரண்களாய் கட்டப்படுவோம்

            அறுந்தாலும் இணைந்திடுவோம்

 

 

- Rajasingh M

 

 

 

https://www.youtube.com/watch?v=vMMUG1yPfNU

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு