22 June 2024

என் கூட இருப்பவரே

என் கூட இருப்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் கூட இருப்பவரே

            எப்போதும் இருப்பவரே

            வழுவாமல் காப்பவரே

            விட்டு விலகாமல் இருப்பவரே - 2

 

                        நீங்க இல்லாத ஒரு நொடியோ?

                        அது எப்போதும் இருந்ததில்லை

                        நீங்க சொல்லாம ஒரு அணுவும்

                        அது எப்போதும் அசைந்ததில்லை - 2

 

1.         சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே

            ஆவியானவர் கொடி ஏற்றுவார்

            கெர்ச்சிக்கும் சிங்கம் போல் வந்தாலுமே

            யூத ராஜா சிங்கம் ஜெயம் எடுப்பார்

 

                        எதற்கும் பயம் இல்லை

                        எதற்கும் கவலை இல்லை

                        அப்பா என் கூட தான்

                        எதற்கும் பயம் இல்லை

                        எதற்கும் கவலை இல்லை

                        அப்பா என் கூட தான்

 

 

2.         மனுஷன் எதிர்த்து நின்றாலுமே

            அப்பா செய்வதை தடுப்பவன் யார்?

            உலகம் பழித்து சொன்னாலுமே

            உலகை படைத்தவர் வழக்காடுவார்

 

                        எதற்கும் பயம் இல்லை

                        எதற்கும் கவலை இல்லை

                        அப்பா என் கூட தான்

                        எதற்கும் பயம் இல்லை

                        எதற்கும் கவலை இல்லை

                        இயேசு என் கூட தான்

 

3.         பகலில் அம்புகள் பறந்தாலுமே

            செட்டையின் மறைவில் காத்திடுவார்

            மாலையில் தொல்லை சூழ்ந்தாலுமே   

            காலையில் களிப்பை நிரப்பிடுவார்

 

                        எதற்கும் பயம் இல்லை

                        எதற்கும் கவலை இல்லை

                        அப்பா என் கூட தான்

                        எதற்கும் பயம் இல்லை

                        எதற்கும் கவலை இல்லை

                        இயேசு என் கூட தான்

 

 

- Blessed Prince P

 

 

https://www.youtube.com/watch?v=TF6Lk_XeIjc

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...