கிருபை கூர் ஐயா

கிருபை கூர் ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

இராகம்: கமாஸ்

தாளம்: ரூபகம்

 

                             பல்லவி

 

          கிருபை கூர் ஐயா - உந்தன்

            அறிவில் தேற்றையா! - என்மீது

 

                             அனுபல்லவி

 

                        சிறியேன் நானையா - பாவ ஜென்மிதானையா! - நான்

                        நெறி யேகிட பெலம் நல்கிட - வேண்டுறேனையா!

 

1.         புவனமேல் மா புண்ணியவான் புனிதனேசுவே!

            தவனமுறும் ஆன்மாதனை தாங்கி மீட்பீரே! - உம்

            பவனமாகவே நான் - என் மனதைப் பற்றுமேன்!

            கவனமாக நான் கர்த்தா! உன்னைக் கண்டடையச் செய்யுமேன் - என்மீது

 

2.         தீமை செய்ய நாடு தெந்தன் திருக்கு நெஞ்சமே!

            நேர்மை பெற நினை யல்லாது யாரென் தஞ்சமே!

            வாய்மை பஞ்சமே! தெய்வ வணக்கம் கொஞ்சமே!

            தாழ்மையாய் உந்தன் தாழ்பணிந்தேன் தாராய் உன் தஞ்சமே - என்மீது

 

3.         பரத்தை நோக்க மனமுமற்ற பதடி நான் ஐயோ!

            சிரத்தை கொண்டு ஓட உந்தன் ஜீவ பாதையோ,

            வருத்தமா மையா உயர் வலிமை தா ஐயா!

            கர்த்தனே எந்தன் காட்சி கண்டு நான் களிக்கச் செய் மெய்யாய் - என் மீது

 

 

- K.S. Abraham

 

 

https://www.youtube.com/watch?v=twlQQEcGtaE

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு