28 June 2024

இராஜாதி ராஜன் இயேசு ராஜன்

இராஜாதி ராஜன் இயேசு ராஜன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இராஜாதி ராஜன் இயேசு ராஜன்

            மேன்மை விட்டு ஊழியம் செய்யவே

            அன்பரின் மார்பில் சாய்ந்து தூங்க

            ஆராரோ பாடும் கீதம் கேட்க

            இம்மானுவேல் மண்ணில் பாலனானார்

            தேவனின் மைந்தன் மனிதனானார்

 

                   இது உற்சாகம் ஊட்டும் ராத்திரி

                        மனமாற்றம் உண்டாக்கும் ராத்திரி

                        தேவ தூதர்கள் வானத்தில் சூழ

                        தேவ ராஜ்யத்தின் பாதையைக் காக்கும்

                        தேவன் தயவாய் தந்த சுதன் பிறந்தார் - (2)

 

1.         பாவத்தின் பாரம் சுமக்கும் ஜனங்கள்

            வாழ்வை இருள் தன்னில் கழிக்கின்றனர்

            வேத வசனம் அறியாமல்

            இறைமொழி முற்றும் தெரியாமல்

                        அலையும் மானிடர் விடுதலைக்காய்

                        தேவன் தன் பாலனை பலியாக

                        பாவிகளுக்காய் கொடுத்த தேவன் - இது உற்சாகம்

 

2.         கருணையில்லா கொடிய ஜனங்கள்

            தனிந்த வாழ்க்கையை வாழ்கின்றனர்

            தேவ சித்தம் உணராமல்

            இவ்விடத்தில் விதைக்காமல்

                        அலையும் மானிடர் விடுதலைக்காய்

                        தேவன் தன் பாலனை பலியாக

                        பாவிகளுக்காய் கொடுத்த தேவன் - இராஜாதி ராஜன்

 

 

- Tamil Lyrics: Dr. A. Pravin Asir

 

 

https://www.youtube.com/watch?v=9u8SL1aqh_Y

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...