தோத்திரம் பாடி துதிபணிந் தேற்றி
53.
பல்லவி
தோத்திரம்
பாடி துதிபணிந்
தேற்றி
பாத்திரா
உம்மைப் பணிவுடன்
அடிபணிந்தேன்.
அனுபல்லவி
கர்த்தரே
கிருபை யுடன்என்
கலக்கங்கள்
மிகநீக்கி
- நின்
கருணை
செய்வீர் நோக்கி
- தோத்திரம்
சரணங்கள்
1. மனுடவ
தாரா பவவினை
தீராய்
பூவில்இவ்
வாண்டதைப்
புனிதநெ றியில்காவா
போதக
நாயகமே - நீர்
சீவனின்
ஊற்றமே - நான்
பருகிட
சுரந்திடுமே
- தோத்திரம்
2. கன்னியின்
மைந்தா கருணையின்
நேசா
கஸ்தியால்
வந்த நித்திய மகிமையிதே
கானக வழியதிலே - நீர்
கரங்கொடுத்
தணைத்ததையே
- நான்
கனவிலும்
மறக்கலாமோ
- தோத்திரம்
3. அழகில்
சிறந்தோர்
அதிசய ரூபர்
ஆதர
வற்றோரின்
அருமையா னோர்அவரை
இந்நிலம்
உம்மையல்லால்
- என்
இடந்தீர்க்க
வேறொருவர்
- இவ்
விடமுண்டோ
யானறியேன்
- தோத்திரம்
Comments
Post a Comment