26 June 2024

திகையாதே கலங்காதே பயப்படாதே

திகையாதே கலங்காதே பயப்படாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   திகையாதே கலங்காதே பயப்படாதே

                        நீதியின் தேவன் வந்துன்னை

                        விடுவித்தே பாதுகாத்திடுவார்

 

1.         வனாந்திரம் மகிழும் கடுவெளி களிக்கும்         

            புஷ்பத்தைப் போலது செழித்திடுமே

            வறண்ட நிலமும் மிகுதியாய் செழித்து

            ஆனந்தக் களிப்புடன் பாடிடுமே - திகை

 

2.         தள்ளாடும் கால்களும் தளர்ந்த கைகளுமே

            திடனடைந்து பெலன் பெற்றிடுமே

            குருடரின் கண்களும் செவிடரின் செவிகளும்

            திறவுண்டு போம் அவர் நாமத்தினால் -  திகை

 

3.         முடவனும் குதிப்பான், ஊமையனும் பேசுவான்

            தடாகமாய் மாறும் வனந்தரமும்

            கடுவெளி ஆறாகும் வெறுந்தரை ஊற்றாகும்;

            கர்த்தாதி கர்த்தர் இயேசு

            நாமத்தினால் - திகையாதே

 

4.         பெரும் பாதையான வழியும் அங்குண்டு

            பரிசுத்த வழி என அழைக்கப்படும்

            தீட்டுள்ளவன் அதிலே நடந்து

            வருவதில்லை

            பேதையர் திசை கெட்டுப்

            போவதில்லை - திகையாதே

 

5.         மீட்கப் பட்டோர்கள் சீயோன் வந்தடைவர்

            ஆனந்தக் களிப்புடன் பாடிக் கொண்டே

            நித்திய மகிழ்ச்சி தலையின் மேலிருக்கும்

            சஞ்சலம் தவிப்பு என்றும்

            ஓடிப்போம் - திகையாதே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...