இராஜாவுக்காக ஆயத்தமாகும் ராணி

இராஜாவுக்காக ஆயத்தமாகும் ராணி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

            இராஜாவுக்காக ஆயத்தமாகும்

            ராணி நான் தானே

            மகாராணி நான் தானே

            மணவாளன் ஆட்டுக்குட்டியாம் இயேசுவின்

                        மணவாட்டி நான் தானே

                        மணவாளன் அவர்தானே - 2

 

            சரீரமான திருச்சபை தனக்கு சிரசே அவரல்லவா

            சிரசே அவரல்லவா

            தலையான அவரின் அவயங்கள் எல்லாம்

                        கிறிஸ்துவர் நாமல்லவா

                        கிறிஸ்துவின் சபை அல்லவா - (2)

 

1.         மோவாபு பெண் ரூத்து போவாசின் முறை பெண்ணாய்

            களம் சேரும் காட்சி கண்டேன் - 2

            குளித்து எண்ணெய் பூசி புத்தாடை அணிந்தாள்

            ஆயத்தம் அதுவே என்றேன் - 2

            இயேசுவை சந்திக்க இருக்கின்ற மணவாட்டி

            இதையே நீ கை கொள்ளுவாய் - 2

            மூழ்கி ஸ்நானம் பெற்று அபிஷேக அருளுடன்

            மீட்பாடை அணிந்து செல்வேன்

                        மீட்பாடை அணிந்து செல்வேன்

                        மீட்பரை காணச் செல்வேன் - (2)

 

2.         சிலுவையின் மேல் சிந்தும் உதிரத்தினால்

            என்னை கிரயமாய் கொண்டாரே - 2

            திருவார்த்தையாலும் தூயாவியாலும்

            அலங்காரம் செய்தாரே - 2

            ஆயத்தம் செய்த மணவறை சேர்ந்து

            ஆனந்தம் அடைவேனே - 2

            ஆயிரம் மாயிரம் ஆண்டுகள் அரசியாய்

            அரசாட்சி செய்வேனே ஆனந்தமாய் வாழ்வேனே

                        அரசாட்சி செய்வேனே 

                        ஆனந்தமாய் வாழ்வேனே - 2

 

 

- Rev. Dr. M.T. PAUL RAGHU



https://www.youtube.com/watch?v=5F8mBcKFUYs

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு