14 June 2024

தேவா உம்மைத் தேடும் நேரம்

தேவா உம்மைத் தேடும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   தேவா உம்மைத் தேடும் நேரம்

                   வசந்த காலம் என்னை வந்து சேரும்

 

1.         என் மனம் உம் வசமானது

            ஏழிசை ராகம் பிறந்தது

            இதயத்தின் வாசல் திறந்தது

            இயேசுவே உம் குரல் கேட்டது

            உம் அன்பு கிடைத்தால் போதுமே

            உயிரே நீரின்றி என் வாழ்வு வீணாகுமே

 

2.         பொல்லாத உலகமதில் புது பாதை தந்தீரே

            புதிதான உதயமதில் சுகராகம் இசைத்தீரே

            தூயவர் உந்தன் துணையிருக்க

            துயரம் என்னை என்ன செய்யும்

            உலகின் ஒளியே உண்மை உறவே

            உம் துணை போதும் வேறென்ன வேண்டும்

 

3.         இருளான என் வாழ்வில்

            ஒளி காட்டும் கதிரவன் நீர்

            இனிதான உமதன்பில்

            என்னை நான் மறந்தேனே

            கடலில் மூழ்கும் படகினைப் போல்

            கவலையில் தினமும் நான் துடித்தேன்

            கலங்கரை விளக்கே காக்கும் கரமே

            கன்மலையே என்னை காத்திடுவாயே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...