தேனிலும் மதுரம் வேதம தல்லால்

தேனிலும் மதுரம் வேதம தல்லால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

359. இராகம்: லாவணி                             ஆதி தாளம்

 

1.       தேனிலும் மதுரம் வேதம தல்லால்

          ஏதுண்டு? சொல், கண்ணே-மிக

            சிற்றின்பமதனை நத்தாசை[1] வைத்து

            தேடுவாயோ கண்ணே.

 

2.         காலையில் பனிபோல் சாலேமோன் மகிமை

            கரைந்தது பார், கண்ணே-நேச

            கர்த்தரின் வசனம் எத்தனை இன்பம்

            காதலி, என் கண்ணே.

 

3.         தோழி, சங்கிர்த இனிமை நற்பாகின்

            சுவையு மிணையோ, கண்ணே? அருள்

            சுருதியின்[2] வசனம் இருதயம் மகிழச்

            செய்திடும், என் கண்ணே.

 

4.         நாற்பது நாளாய்த் தீப்பசிக்காளாய்

            நலிந்திட்ட போதேசு-வெகு

            தாற்பரியத்தோ டேய்த்த பசாசை

            ஜயித்தா ரிதினாலே.

 

5.         தேனிலும் தேன்கூண் டொழுகல்கள் தனிலும்

            திவ்விய மதுரமாமே;-அது

            ஜீவனுக் கமிர்தம், ஆவிக்குச் சுகிர்தம்

            தினம் ருசித்திடு, கண்ணே.

 

 

- ஆபிரகாம் அல்லின்

 

 

https://www.youtube.com/watch?v=2lLQie1gqLI

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] பேராசை

[2] வேதத்தின்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு