தேவாதி தேவன் என் சொந்தமானார்

தேவாதி தேவன் என் சொந்தமானார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

F-Maj/2/4/T-123

 

1.       தேவாதி தேவன் என் சொந்தமானார்

            என்ன ஆனந்தமே

            மன்னாதி மன்னன் என்னைத் தேடி வந்தார்

            என்ன பேரின்பமே

 

                        சந்தோஷமே என் உள்ளத்தில் நதியாய் பாயுதே

                        சர்வ வல்லவர் இயேசுவே

                        என் வாழ்வின் சொந்தமே

 

2.         ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்

            என் இயேசு நல்லவரே

            இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி

            என் மீட்பரைப் போற்றுவேன்

 

3.         கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டாரே

            களிகூர்ந்து பாடிடுவேன்

            கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்

            எந்நாளும் நன்றி சொல்வேன்

 

4.         என் ஆத்ம நேசர் என் இயேசு ராஜா

            என்றென்றும் என் சொந்தமே

            எல்லையில்லாத தம் அன்பினாலே

            என்னையும் நேசித்தாரே

 

 

- Pr. Reegan Gomez

 

 

https://www.youtube.com/watch?v=tP5n9Ct2J1Q

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு