தேவாட்டின் திரு ரத்தத்தால்

தேவாட்டின் திரு ரத்தத்தால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவாட்டின் திரு ரத்தத்தால்

                        நான் சுத்தமாகினேன்!

                        அவரின் சுத்த ரத்தத்தால்

                        நான் ஜெயம் பாடுவேன்

 

                        மகிமை ரட்சகா! துதி உமக்கென்றும்

                        சேற்றில் நின்றென்னை

                        நீர் மீட்டெடுத்ததினால்

 

                        துதிப்பேன் உம்மை நான்

                        ஆயுள் முழுவதும் நன்றியோடு பணிந்து

 

2.         சந்தோஷித்தும்மைப் பாடுவேன்

            சீயோன் யாத்திரையில்

            பந்தயப் பொருள் பெற்றிட

            நான் முந்தி ஏகுகிறேன்

 

            கிடைக்கும் நிச்சயம் கிரீடம் எனக்கு

            சத்துருக்களதைக் கொண்டு போவதில்லை

 

            கர்த்தரின் கையினின்று

            அன்று நான் பெறுவேன்

            தூதர் கூட்டத்தின் மத்தியில்

 

3.         என் பாக்கியம் நினைக்கையில்

            என் உள்ளம் துள்ளுதே

            பூலோக சுகம் தள்ளினேன்

            மெய்ப் பாக்கியம் கண்டு

 

            நித்திய நகரில் சேர்ந்து நான் பாடுவேன்

            இராஜன் முகம் கண்டு

            என்றும் சந்தோஷிப்பேன்

 

            இரத்தத்தின் பலனால்

            வாழுவேன் சொர்க்கத்தில்

            கோடி கோடி யுகங்களாக

 

4.         மனோகரமாம் சீயோனில்

            நான் வேகம் சேருவேன்

            கிலேசம் முற்றும் நீங்கிப்போம்

            அவ்விடம் இயேசுவே

 

            நித்திய சந்தோஷம்

            பெற்றிடுவேன் அங்கே

            சத்துரு வந்ததைக் கொண்டு போவதில்லை

 

            ஆனந்தம் கூடுமே, கீதங்கள் பாடுவேன்

            இராஜன் இயேசுவின் சமூகமே

 

 

https://www.youtube.com/watch?v=aHUW_3BEfW8

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு