தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்
355. இராகம்:
நாதநாமக்கிரியை
ஏகதாளம் (489)
பல்லவி
தோத்திரிக்கிறேன்
நான் தோத்திரிக்கிறேன்-தேவ
சுந்தரக்
கிறிஸ்து
வேந்தைத்
தோத்திரிக்கிறேன்.
சரணங்கள்
1. க்ஷேத்திரத்
தொரேயோவாவைத்
தோத்திரிக்கிறேன்,-கன
திவ்விய
திரித்துவத்தைத்
தோத்திரிக்கிறேன்;
பாத்திரமாக்கிக்
கொண்டோனைத்
தோத்திரிக்கிறேன்;-உயர்
பரமண்ட
லாதிபனைத்
தோத்திரிக்கிறேன்;
நேத்திரக்
க்ருபாநதியைத்
தோத்திரிக்கிறேன்;-சதா
நித்திய
மகத்துவத்தைத்
தோத்திரிக்கிறேன்
கோத்திரத்
திஸ்ராவேலைத்
தோத்திரிக்கிறேன்;-யூதர்
கொற்றவனைப்
பெற்றவனைத்
தோத்திரிக்கிறேன்.
- தோத்
2. அண்டர்களி
னாயகனைத்
தோத்திரிக்கிறேன்;-அதற்கு
அப்புறத்தை
யப்புறத்தைத்
தோத்திரிக்கிறேன்;
மண்டல மெலாமறியத்
தோத்திரிக்கிறேன்;-முழு
வானவரும்
பார்த்து நிற்கத்
தோத்திரிக்கிறேன்
தெண்டனிட்டுத்
தெண்டனிட்டுத்
தோத்திரிக்கிறேன்;-
மனச் சிந்தையினால்,
விந்தையினால்
தோத்திரிக்கிறேன்;
தொண்டனடி
யேனென்று
தோத்திரிக்கிறேன்;-என்றன்
துன்பமெல்லாந்
தீருமென்று
தோத்திரிக்கிறேன்.
- தோத்
- வேதநாயகம்
சாஸ்திரியார்
Comments
Post a Comment