26 June 2024

தோத்திரப் பலிகள் தேவனுக்கே செலுத்திடுவோமே

தோத்திரப் பலிகள் தேவனுக்கே செலுத்திடுவோமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தோத்திர பலிகள் தேவனுக்கே செலுத்திடுவோமே

                   துதிக்குப் பாத்திரர் இயேசு ராஜனை

                        போற்றிப் புகழ்வோமே

 

1.         தாய் மறந்தாலும் தேவன் என்றும் மறவாரே

            உள்ளங் கையில் நம்மையும் வரைந்துள்ளாரே

            பலத்தினாலல்ல பராக்கிரமம் அல்ல

            ஆவியினாலே எல்லாமுமே ஆகும் என்றாரே

 

2.         பாவ சாப ரோகம் போக்கும் பரிசுத்த தேவன்

            குறை யாவும் நீக்கிடும் சம்பூரணர்

            திக்கற்றோர்களுக்கு மா தயாபரர்

            தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றாம் ஜீவாதிபதி

 

3.         நீதியின் கரத்தால் நம்மை தாங்கி நடத்துவார்

            நம்பினோரை என்றுமே கைவிடாரே

            மேகத்தில் இயேசு மீண்டும் வருவாரே

            ஆயத்தமாய் சந்திப்போமே சீயோன் ராஜனை

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...