தோத்திரம் தேவா காத்திடும் மூவா
ஸ்தோத்திரம்
தேவா! காத்திடும்
மூவா!
நேத்திரம்
போல் நேசித்து
புது நாளில்
தீங்கொன்றும்
அணுகாமல்
எம்மை
தாங்கி நடத்தும்
தேவா!
எமக்கீந்த
இப் புது நாளில்
1. மானிலமீதிலே
- கானகவழியில்
மானிடர்
உம்மை விரும்பியே
பணிந்து
வந்தோம்
முந்தின
காலங்களில்
எம் அன்னை
போல் அன்புடனே
நின்று
தந்தை போல் தாங்கினீரே
2. ஜெபமதை
கேட்கும் ஜீவனின்
தேவா
ஏழைகள்
எம் ஜீவனை
காத்தணைத்தீர்
ஜீவிக்கச்
செய்தீர் எம்மை
எத்
தீமையும் தீண்டிடாமல்
இங்கு தீயோன்
மேல் ஜெயம் அளித்தே
3. தினமும்
நீர் நடத்தும்
திரு வழிதனிலே
தேவன் உம்மையே
நம்பிப்
பின்பற்றுவேனே
வேதனை அணுகிடாமல்
இந்நாளிலும்
நடத்துவீரே
இங்கு வெறொரு துணையில்லையே
4. பார்தலமீதிலே
பரிசுத்தமாச்
சீருடனே
சீயோன் பார்த்தேகிடவே
என்றும்
கிருபை அருள்வாய்
மா தூய்மையின்
சாயலுடன்
உம்மை மகிமையில்
தரிசிக்கவே
5. கர்த்தர்
உம் வருகையை
களிப்புடன்
காண காத்துக் காத்தெம்
கண்களும்
களைத்திடுதே
இன்றையத்
தினமதிலே
நீர் வந்தாலோ
எம் துரையே உம்
மந்தையும்
மகிழ்ந்திடுமே
Comments
Post a Comment