தேவாதி தேவனுக்கே துதி
தேவாதி
தேவனுக்கே துதி
திரியேக
நாதனுக்கே
துதி
தேவ சேயரானோர்
சேர்ந்து சேவிக்கும்
உன்னத
தேவ நாமத்திற்கே
ஸ்தோத்திரம்
துதி
நேற்றும்
இன்றும் மாறாத
நம் நேசனை
1. ஆ... ஆ... கர்த்தனையே
ஆத்துமாவே
ஸ்தோத்தரி
ஆ... சுத்த
நாமத்தையே
நிதம் ஸ்தோத்தரி
அத்தன்
செய்த உபகாரங்கள்
அத்தனையும்
மறவாதிரு
உத்தமன்
உன் அக்கிரமங்கள்
யாவையும்
மன்னித்தார்
நித்தம்
துதிக்க உன் நோய்
நீக்கி விட்டார்
2. ஓ... மீட்டினார்
உன் பிராணனை
அழியாது
ஓ... சூட்டினார்
முடி இரக்கம் கிருபையால்
முடி இரக்கம்
கிருபையால்
ஊட்டினார்
உன் வாயை நன்மையால்
நாட்டினார்
மீண்டும் பெருங்
கழுகைப் போல்
காட்டின
தேவ அன்பை எண்ணி
என் ஆத்துமாவே
பாட்டினாலும்
புகழ்ந்தேற்றி
ஸ்தோத்தரி
3. ஆ... நம் பாவங்களுக்கு
தக்க செய்யாமல்
ஆ... நம் அக்கிரமங்கட்கு
சரி கட்டாமல்
நம்முடைய
மாபெருங்
கிருபையால்
நம்முடைய
பாவங்கள் அகற்றினார்
கர்த்தர்
உருக்கமும் இரக்கமும்
கிருபையும்
மெத்த சாந்தமும்
உள்ளவர் ஆமென்
4. ஓ... புல்லைப்
போலவே மனிதன் நாட்களாம்
எல்லையில்லாதது
கர்த்தர் கிருபையாம்
வானத்தின்
சிங்காசனம்
ஸ்தாபித்து
ஞானமோடு
அவர் ஆள்வதால்
உன்னதத்தின்
சர்வ சேனைகளோடு
சேர்ந்துமே
என் ஆத்துமாவே
கர்த்தரை ஸ்தோத்தரி
Comments
Post a Comment