28 June 2024

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தவர்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தவர்

            அளவிட முடியாத அன்பு வைத்தவர்

            எண்ணி முடியாத இரக்கம் எனக்களித்தவர்

            என்னையே கவர்ந்து கொண்ட நேசர் பெரியவர்

 

            எல்லை இல்லா நன்மைகளை எனக்கு என்றும் செய்தவர்

            எண்ணில் அடங்கா கிருபை எனக்கு ஈந்தவர்

            ஏற்றம் இறக்கத்தினில் என் கூட வந்தவர்

            என் பெயரை உள்ளங்கையில் வரைந்து கொண்டவர்

 

                        உம்மை போல ஒரு தெய்வம்,

                        நான் உலகில் கண்டது இல்லை

                        உம்மை போல ஒரு நேசர்,

                        நான் இனியும் காண்பது இல்லை - 2

 

1.         ஒன்னும் இல்லா என்னையே உண்மையாய் நேசிக்க

            உம்போல தெய்வம் இங்கு யாரும் இல்லையே

            உறவுகள் மறந்தாலும் மாறாத நேசரே

            உம் அன்புக்கு ஈடு இணை இல்லையே

 

            பாடுகள் என்னையே சூழ்ந்து நின்றாலும்

            படைத்தவர் நீர் என்னோடு பயம் இல்லையே

            ரதங்களும் குதிரைகளும் என்னைப் பின்தொடர்ந்தாலும்

            செங்கடல் பிளந்தவர் நீர் எனக்கு முன்னே - உம்மை போல

 

2.         மண்ணான என்னையே மகனாய் அழைத்தவர் நீர்

            நன்மையான ஈவுகளை எனக்கு தந்தீரே

            என்னை சுகமாக்க நீர் காயப்பட்டீரே

            உம் உயிர் கொடுத்து எனக்கு ஜீவன் தந்தீரே

 

            பாதை எல்லாம் உம் தூதர்கள் கொண்டு என்னை

            கால்கள் இடறாமல் காத்து கொண்டீரே

            எனக்காய் பரிந்து பேசி நாட்களை கூட்டித் தந்து

            நித்தம் ஒரு புதுநாளை காண செய்தீரே - உம்மை போல

 

 

- JUDAH BARNABAS

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...