தேவா தேவாசீர் வாதம் தாரும் தாரும் தினமும்

தேவா தேவாசீர் வாதம் தாரும் தாரும் தினமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                             பல்லவி

 

தேவா தேவாசீர் வாதம் தாரும் தாரும் தினமும்

 

                             அனுபல்லவி

 

ஜீவா யேஹோவா மூவா யேஹோவா காவா யோவா

 

                             சரணங்கள்

 

1.         தீபம் பொருத்தி ஞான கீதம் படித்துத் துதி

            தேட்டமுடன் செய் ஜெபக் கூட்டமதில் நீர் வந்து - தேவா

 

2.         பாடி ஜெபித்துனை மன்றாடித் துதிக்கச் சபை

            கூடி வரும்படிக்கு அன்போடு தயை புரியும் - தேவா

 

3.         இந்தச் சபை தழைக்க உந்தன் வரம் செழிக்கத்

            தந்தாள் கமல பதம் சந்தமாய்த் துதிக்க - தேவா

 

4.         ஓய்வு நாளைக் கைக்கொண்டு ஓய்ந்தும்மை ஆராதிக்க

            சேயர் கட்கு நற்சுப சிந்தை வரமளிக்க - தேவா

 

5.         எங்கள் மாடாடு புஞ்சை நஞ்சை வயல்களெல்லாம்

            பொங்கிப் பெருக அருள் போந்த நல்வாக்கருளும் - தேவா

 

6.         இந்த வீட்டாரை யுந்தன் இரக்கக் கண்ணாலே பார்த்து

            சந்ததம் ஆசீர்வாதம் தந்தாளும் அருள் பூத்து - தேவா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு