தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு

தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு

                   துதிச்சுப் பாடினேன் என் தரித்திரம் போச்சு

                        அல்லேலூயா - 6 நான் ஆடிப்பாடுவேன்

 

1.         அல்லேலூயா சொன்னதாலே அல்லல் நீங்கிப் போச்சு

            உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சி -2

            ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கிப் போச்சு - 2

            அவரை வேண்டி வேண்டி துதிச்சதாலே வேதனை நீங்கிப் போச்சு - 2

 

2.         தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு

            கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சிப் போச்சு - 2

            வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு - 2

            நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு - 2

 

3.         அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு

            நண்பரே என்றதாலே நட்பு நெருங்கிப் போச்சு - 2

            இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு - 2

            உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு - 2 - ஸ்தோத்திரம்

 

 

- Pr. Moses Rajasekar

 

 

https://www.youtube.com/watch?v=mx-sClAyabg

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு