என் இருதயம் உம்மை பற்றி

என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது

                        என் இருதயம் உம்மை என்றும் நேசிக்கின்றது - 2

                        நான் நடந்தாலும் நேசிக்கிறேன்

                        அமர்ந்தாலும் யோசிக்கிறேன்

                        படுக்கையிலும் தியானிக்கிறேன் தியானிக்கிறேன் - 2

 

1.         புல் உள்ள இடங்களில் மேய்த்திடுவார்

            அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார் - 2

            நன்மையும் கிருபை என்னை தொடரும்

            ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்

            ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் கிருபை தொடரும் - 2.

 

2.         எக்காலமும் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்

            அவர் துதி எப்பொழுதும் நாவில் இருக்கும் - 2

            இரவும் பகலும் துதித்திடுவேன்

            ரா ஜாமத்தில் துதித்திடுவேன்

            அனு தினமும் துதித்திடுவேன் துதித்திடுவேன் - 2.

 

3.         கோழி தன் குஞ்சுகளை சேர்ப்பது போல்

            உன்னத மறைவில் சேர்த்திடுவார் - 2

            கழுகை போல பறந்திடுவேன்

            மான்களை போல ஓடிடுவேன்

            ஜீவ தண்ணீரைப் பருகிடுவேன் பருகிடுவேன் - 2

 

4.         உள்ளங் கையில் வரைந்தென்னை ஏந்திடுவார்

            எத்தீங்கும் அணுகாமல் காத்திடுவார் - 2

            போகையிலும் வருகையிலும்

            அவர் சமூகம் என்னுள்ளே

            போகையிலும் வருகையிலும் ஏந்திடுவார் - 2

 

5.         வியாதிகளை உன்னை விட்டு நீக்கிடுவார்

            தழும்புகளால் உன்னை குணமாக்கிடுவார் - 2

            அவர் செட்டையின் கீழே ஆரோக்கியம்

            நீதியின் சூரியன் உன்னில் உதிக்கும்

            நீதியின் சூரியன் உன்னில் உதிக்கும் பூரண சுகம் - 2

 

 

- Glory Kiran & Evangeline Aradhana

 

 

https://www.youtube.com/watch?v=4QTbosqMi4E

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு