19 June 2024

ஆதி முதலாக இருப்பவரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        ஆதி முதலாக இருப்பவரே

                        ஆரம்பம் ஏதும் இல்லாதவரே

                        ஜோதி மயமாக இருப்பவரே

                        கர்த்தாவே... ஆண்டவரே...

 

            முத்தமிழால் போற்றிடுவேன்

            எல்லா மொழியினால் உயர்த்திடுவேன் - 2

            உமக்கே முதல் கனம்,

            உமக்கே முதல் மரியாதை,

            உமக்கே முதல் வணக்கம்,

 

                        எல்லா துதிகளும் ஏற்றுக்கொள்ளும்

                        கர்த்தாவே! ஆண்டவரே!

                        தேவா நீர் வாழ்க! - (2)

 

1.         ஒருவராக இருப்பவர் தாம் ஒருவரே ஞானமுள்ளவர்

            ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்பவர் - 2

 

                        சதாகாலமும் உயிரோடிருக்கும் தேவனைத் தொழுதிடுவோம்

 

                        அவர் நாமம் வாழ்க! அவர் அரசு வருக!

                        அவர் சித்தம் நிறைவேறுக! - 2

                        தேவா நீர் வாழ்க! - 2

 

2.         சர்வ சிருஷ்டிகர் ஆனவர் சர்வத்தையும் ஆளுகின்றவர்

            சேனைகளின் கர்த்தர் என்ற நாமம் உள்ளவர் - 2

 

                        சதாகாலமும் உயிரோடிருக்கும் தேவனைத் தொழுதிடுவோம்

 

                        அவர் நாமம் வாழ்க! அவர் அரசு வருக!

                        அவர் சித்தம் நிறைவேறுக! - 2

                        தேவா நீர் வாழ்க! - 2

 

3.         தாயின் கருவினில் காத்தவர் உள்ளங்கைகளில் வரைந்தவர்

            இரவு பகலாக என்னை காத்து வருபவர் - 2

 

                        சதாகாலமும் உயிரோடிருக்கும் தேவனைத் தொழுதிடுவோம்

 

                        அவர் நாமம் வாழ்க! அவர் அரசு வருக!

                        அவர் சித்தம் நிறைவேறுக! - 2

 

            முத்தமிழால் போற்றிடுவேன்

            எல்லா மொழியினால் உயர்த்திடுவேன் - 2

            உமக்கே முதல் கனம்,

            உமக்கே முதல் மரியாதை,

            உமக்கே முதல் வணக்கம்,

 

                        எல்லா துதிகளும் ஏற்றுக்கொள்ளும்

                        கர்த்தாவே! ஆண்டவரே!

                        தேவா நீர் வாழ்க! - (4)

 

 

- Bro. J. Allen Paul

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...