என்று உம்மை பார்ப்பேன்

என்று உம்மை பார்ப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என்று உம்மை பார்ப்பேன்,

            என்று எனக்குத் தெரியவில்லை.

            நாளை என்னவோ அது ஒன்றும் புரியவில்லை.

                        'என் நேசர் இருக்கிறார் என்னோடு

                        என்றும் யோசித்து நகர்கிறேன் விண்ணோடு' - 2

 

1.         மறுதலித்தேனோ என்னும் குரல்,

            என் முதிர் நரை வினவுமோ திரள்,

            என்னவென்று கேட்டேன் அவரை குறையிலும் நேசித்தாய் உன்னதரை,

            'சேவிப்பாய் ஆண்டவரை என்றும் மனிதனின் மீனவனோ நீ?' - (2)

 

2.         காட்டி கொடுத்தேனோ என்னும் விரல்,

            என் விடியும் விண்மீனின் பகல்,

            என் கூக்குரல் கூப்பிட்டதவரை பாவத்தில் தோற்று வென்றேன்,

            'சேவிப்பாய் ஆண்டவரை என்றும் நல்லதோர் குமாரனோ நீ?'- (2)

 

3.         முடிந்ததேனோ என்னும் கடல்,

            என் சாவின் சாவினுடைய மடல்,

            ஜெயித்தேன் இன்று என்றேன் அவரை ஜெயித்தாய் மனதில் உத்தமரை,

            'சேவிப்பாய் ஆண்டவரை என்றும் ஓட்டத்தை முடித்தாயோ நீ?' - (2)

 

 

- Bro. Alvin Mark

 

 

https://www.youtube.com/watch?v=RBlGfJP8ykY

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு