13 June 2024

வெள்ளைப் பனி புல்லில் விழும் ராவினில்

வெள்ளைப் பனி புல்லில் விழும் ராவினில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   வெள்ளைப் பனி புல்லில் விழும் ராவினில்

                        இயேசு பாலன் தோன்றினாரே - 2

                        எம் இல்லம் மகிழட்டும் எம் உள்ளம் மகிழட்டும்

                        விண்ணும் மண்ணும் ஒன்றாய் சேரட்டும் - 2 - வெள்ளைப்

 

1.         பொன்னும் போளும் எங்கே அது காணிக்கையாய் இங்கே

            சின்ன பாலன் முன்னே வைப்போமே

            வண்ண பாதம் போற்றி நிற்போமே

            தூபவர்க்கம் எங்கே தூயோனுக்காய் இங்கே

            வானவர்க்கு நம்மை ஈவோமே

            ஏசுவுக்கு சீடர் ஆவோமே

            பூத்திருக்கும் லீலி புஷ்பம் வாசம் வீசட்டும்

            காத்திருக்கும் கண்களுக்குள் நேசம் வீசட்டும்

            ஆர்த்திருக்கும் கின்னரங்கள் பா முழங்கட்டும்

            இயேசு மகிழட்டும் - வெள்ளைப் பனி

 

2.         கோட்டை ஒன்றும் இல்லை பெரும் கொத்தளங்கள் இல்லை

            தாழ்மை என்னும் தத்துவம் இது

            வான் தேவன் சித்தமும் இது

            மாடமொன்றுமில்லை எழில் மஞ்சம் ஒன்றுமில்லை

            புல்லணைக்குள் தேவனின் பிள்ளை இதில்

            புன்னகைக்கும் பாலனோ வெள்ளை

            வார்த்தை ஒன்றும் மாம்சமாக தோற்றம் கொண்டதோ

            வாழ்க்கையின்று தூய்மையாக மாற்றம் கண்டதோ

            வானகத்தின் வாசலைத் தான் கண்கள் கண்டதோ

            மனுவேல் இவர்தானோ - வெள்ளைப் பனி

 

3.         வானமெல்லாம் வெள்ளை பேரழகின் எல்லை

            வாழ் முளைத்த தாரகை இது

            கால் முளைத்த பேரொளி இது

            ஆடை எல்லாம் கந்தை ஆனாலிது விந்தை

            ஆத்தொழுவின் அற்புதம் இது

            நாம் வணங்கும் பொற்பாதம் இது

            மேகமெல்லாம் பூந்துளிகள் தூவும் நேரமோ

            ராகமெல்லாம் தேன் துளிகள் போடும் நேரமோ

            தூதரெல்லாம் தேன் குரலில் பாடும் நேரமோ

            இனிமை இதுதானோ - வெள்ளைப் பனி

           

 

- Dr. V.C. Amuthan

 

 

https://www.youtube.com/watch?v=IaogrsJGous

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...