13 June 2024

தாய் என்னை மறந்தாலும்

தாய் என்னை மறந்தாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தாய் என்னை மறந்தாலும்

            தந்தை என்னை வெறுத்தாலும்

            மாறாத என் தெய்வமே - 2

 

                        உன் அன்பு பெரிதல்லோ

                        அது விலையேறப் பெற்றதன்றோ - 2

 

1.         மனிதன் என்னை தூற்றினபோது

            தேற்றி என்னை தாங்கினீரே - 2

            தகப்பன் போல அரவணைத்து

            அணைத்துக் கொண்டீரே - 2 - உன் அன்பு

 

2.         தனிமையின் வேளை யாரும் இல்லா நேரம்

            உன்னத பெலத்தால் உயிர்ப்பித்தீரே - 2

            கைவிடாமல் விலகிடாமல்

            நிழலாய் இருப்பவரே - 2 - உன் அன்பு

 

3.         என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள்

            ஆயிரம் ஆயிரம் ஆயிரமே - 2

            இமைப்பொழுதும் உறங்காமல் காத்தீர்

            ஆயிரம் ஸ்தோத்திரமே - 2 - உன் அன்பு

 

 

- Hannah Evangeline

 

 

https://www.youtube.com/watch?v=RBwpa2A1zS4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...