07 June 2024

கிறிஸ்துவின் அன்பை விட்டு

கிறிஸ்துவின் அன்பை விட்டு

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

(பெண்கள் ஐக்கிய சங்க பாடல்-2024)

 

          கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?

          உபத்திரவமோ, வியாகுலமோ, பசியோ, பட்டயமோ

            இயேசு கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?

            துன்பமோ, பெலவீனமோ ஒன்றும் பிரித்திடாதே

                        இவை யாவற்றிலும் நம்மில் அன்புகூறும் இயேசுவால்

                        முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்

                        தீமை யாதொன்றிலும் நாம் விழுந்துவிடோம்

                        இயேசுவால் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் - 2

 

1.         தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் - 2

            கர்த்தர் நமக்காய் சத்ருவை எதிர்ப்பார்

            சகாயம் செய்திடுவார் - 2 - இவை

 

2.         உபத்திரவம் உலகில் உண்டு - அதை

            ஜெயத்த நம் இயேசு நம்மோடு - 2

            அவரையே சார்ந்து திடன் கொள்ளுவோம்

            அவர் ஜெயத்தால் நாம் ஜெயம் பெறுவோம் - 2 - இவை

 

3.         நமக்காக பரிதபிக்கும் ஒரு ஆசாரியன் நமக்கு உண்டு - 2

            நம்மைப் போல் சோதனைகள் கடந்து வந்தார்

            நம் பலவீனம் யாவும் அறிவார் - 2 - இவை

 

கோரஸ் - 1

 

(சட்டவாக்கியம் - 2024)

 

          தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும்

            வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன் - 2

                        உன் சந்ததியின் மேல் என் ஆவியையும்

                        உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் - 2

            ஏசாயா 44-ஆம் அதிகாரம் 3-ஆம்  வசனம் நம் சட்டவாக்கியம்

 

கோரஸ் - 2

 

            என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே

          எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு - 2

                        பெலணுண்டு பெலணுண்டு

                        என்னைப் பெலப்படுத்தும் கிறிஸதவினாலே

                        எல்லாவற்றையும் செய்ய பெலணுன்று

 

1.         குடும்ப ஜெபத்தின் அவசியம் கருதி

            குடும்பமாக ஜெபித்திடுவேன் - 2 - என்னைப்

 

2.         திருச்சபைக்காக கண்ணீரோடு

            தினமும் கருத்தாய் ஜெபித்திடுவேன் - 2 - என்னைப்

 

3.         நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடு

            அர்ப்பணத்தோடு ஓடிடுவேன் - 2 - என்னைப்

 

கோரஸ் - 3

 

            We shall over come

            We shall over come

            We shall over come, one day

            Oh, deep in my heart

            I do believe

            We shall over come, one day

 

கோரஸ் - 4

 

          இயேசு என்னும் நாமத்தில் - 2

            ஜெயம் நமக்குண்டு

            இயேசு என்னும் நாமத்தில் - 2

            பேய்கள் பயந்தோடும்

            இயேசு நாமத்தில் நிற்கும்போது

            யார் நமக்கெதிர் நிற்பாரே

            இயேசு இயேசு நாமத்தினில்

            ஜெயம் நமக்குண்டு

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...