(பெண்கள்
ஐக்கிய சங்க பாடல்
- 2024)
முற்றிலும்
ஜெயங்கொள்ளும்
இயேசு - நமக்கு
முற்றிலும்
ஜெயம் கொடுக்கும்
இயேசு - 2 - அல்லேலூயா
தந்தானே
தந்தானே தந்தன
தந்தன தந்தானே
- 2
1. யாக்கோபின்
மனைவியான லேயாளும்
உடைந்து போனாள்
கூச்ச பார்வை
இருந்ததினால்
அற்பமாக எண்ணப்பட்டாள்
முற்றிலும்
ஜெயம் கொள்ளும்
தேவனிடம் ஜெபித்ததால்
கணவனின்
அன்பையே மீண்டுமாக
பெற்றுக் கொண்டாள்
- 2 - முற்றிலும்
2. அம்ராமின்
மனைவியான யோகபேத்தும்
பிள்ளை பெற்றாள்
மோசே என்னும்
பிள்ளையை பாதுகாத்து
வைத்திருந்தாள்
முற்றிலும்
ஜெயம் கொள்ளும்
தேவனை நம்பியதால்
தேவனின்
திட்டத்தை மோசே
மூலம் நிறைவேற்றினாள்
- 2 - முற்றிலும்
3. கூசாவின்
மனைவியான யோவன்னாளும்
ஊழியம் செய்தாள்
முற்றிலும்
ஜெயம் கொள்ளும்
கிறிஸ்துவை அறிவித்தாள்
பெண்களான
நாமும் இயேசுவை
அறிவித்தால்
இந்தியா
இயேசுவை சீக்கிரமாய்
அறிந்திடும் -
2 - முற்றிலும்
No comments:
Post a Comment