07 June 2024

நம்மில் அன்புகூரும் இயேசுவாலே

நம்மில் அன்புகூரும் இயேசுவாலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

(பெண்கள் ஐக்கிய சங்க பாடல் - 2024)

 

 

          நம்மில் அன்புகூரும் இயேசுவாலே

          முற்றும் ஜெயங்கொள்ளுவோம் - 2

 

                        ஜெயங்கொள்ளுவோம் (6)

                        ஜெயத்தைப் பெற்றிடுவோம் - 2 - நம்மில்

 

1.         சூழ்நிலைக் கண்டு பயப்படாதே

            விசுவாசம் கொண்டிரு

            சூழ்நிலைகளை ஆள்பவர் நம்மோடு இருக்கிறாரே - 2

                        காற்றும் பலமாய் வீசலாம்

                        கடலும் கொந்தளித்து எழும்பலாம் - 2

                        இரையாதே என்று அமைதிப்படுத்திடுவார் இயேசு - 2 - நம்மில்

 

2.         திறமையே ஒருநாளும் பார்க்காதே கர்த்தர் பெரியவரே

            செங்கடல் பிளந்தது அவர் கிருபை நம்மோடு இருக்கிறாரே - 2

                        தடுமாற்றம் நம்மில் வரலாம்

                        தயக்கம் எட்டி பார்க்கலாம் - 2

            நம்மோடு இருப்பவர் சர்வ வல்லவரே - 2 - நம்மில்

 

3.         ஆண்டவராலே அழைக்கப்பட்டாய் பயப்படாதே நீ

            நன்மைக்கேதுவாய் நடக்கிறதே கலங்கிடாதே நீ - 2

                        நாசமோசமோ ஏற்படலாம்

                        உபத்திரவமோ வாட்டலாம் - 2

            அன்பை விட்டு பிரிக்க முடியாது - அவர் - 2 - நம்மில்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...