12 June 2024

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

            தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை

 

                        ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

 

1.         உன்னதத்தில் தேவனுக்கே

            மகிமை உண்டாகட்டும் - இந்தப்

            பூமியிலே சமாதானமும்

            பிரியமும் உண்டாகட்டும் - ஐயா

 

2.         செவிகளை நீர் திறந்து விட்டீர்

            செய்வோம் உம் சித்தம் - இந்தப்

            புவிதனிலே உம் விருப்பம்

            பூரணமாகட்டுமே - ஐயா

 

3.         எளிமையான எங்களையே

            என்றும் நினைப்பவரே - எங்கள்

            ஒளிமயமே துணையாளரே

            உள்ளத்தின் ஆறுதலே - ஐயா

 

4.         தேடுகிற அனைவருமே

            மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று

            பாடுகிற யாவருமே

            பரிசுத்தம் ஆகட்டுமே - ஐயா

 

5.         குறை நீக்கும் வல்லவரே

            கோடி ஸ்தோத்திரமே - பாவக்

            கறை போக்கும் கர்த்தாவே

            கல்வாரி நாயகனே - ஐயா

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=h3Ygtrge1NA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...