தேவனுக்கு
மகிமை செலுத்தி
பாடுவேன்
மனிதரோடு
சீர் பொருந்தி
வாழுவேன்
பூலோக
அமைதி பெறும் வழிதனைக் கூறி
மேலோக
ஆசை கொண்டு முன்னேறுவேன்
1. உள்ளத்துக்
கசப்பினை
வேரறுத்தே
எண்ணத்தில்
தூய்மையை அணிந்தாலே
தேவனின்
அன்பில் நிறைந்திடுவேன்
அதை நீதியின்
கனிகளால் காட்டிடுவேன்
2. மன்னித்தும்
மறந்தும்
வாழ்ந்திடுவேன்
பகைமைக்கு
வழியின்றி நடந்திடுவேன்
இயேசுவின்
சிந்தையை
அணிந்திடுவேன்
எல்லோரும்
சரி நிகர் சமம்
என்பேன்
3. இயேசுவை
மனதாரப் பின் செல்லுவேன்
இக்கால
மனிதருக்கு வழி
சொல்லுவேன்
பிறர் மனம்
கவர்ந்திட
வாழ்ந்திடுவேன்
சமுதாயம்
செழித்தோங்க
உழைத்திடுவேன்
https://www.youtube.com/watch?v=ekFfZ6Nw0XI
No comments:
Post a Comment