12 June 2024

தேவனின் ஆலயமே பரிசுத்த

தேவனின் ஆலயமே பரிசுத்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

                        மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே - தேவனின்

 

1.         இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்

            அவருக்காய் கிரயமாய்க் கொள்ளப்பட்டோம் - 2

            தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம்

            நாம் தேவபிள்ளைகளானோம்

            அவர் சொந்த ஐனமானோம் - 2 - தேவனின்

 

2.         நாம் இனி நம்முடையவர்களல்ல

            அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர் - 2

            வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்

            பரிசுத்தம் காத்துக் கொள்வோம்

            பரிசுத்த ஜாதியாக - 2 - தேவனின்

 

3.         கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்

            அவருடன் ஒரே ஆவியாயிருப்போம் - 2

            ஆவியினாலும் சரீரத்தினாலும்

            மகிமை செலுத்திடுவோம்

            கர்த்தருக்கே என்றும் - 2 - தேவனின்

 

4.         கறை திரை இல்லா சபையாக

            கற்புள்ள கன்னிகையை போல

            இயேசுவுக்காக ஜீவிப்போமே என்றும் அவர் சித்தம்

            செய்திடுவோம் மணவாட்டி ஆகிவிடுவோம்

 

5.         இயேசுவின் வருகை நெருங்கிடுதே

            அவர் பிரசன்னம் விரைந்திடுதே

            மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே

            நாம் மறுரூபமாகிடுவோம்

            மகிமையில் சேர்ந்திடுவோம்.

 

 

- Pastor Johnrose

 

 

https://www.youtube.com/watch?v=8EdMkhH6gBg

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...