தேவனே துயர்காலத் தடைக்கலம் தேவனே
258.
இராகம்: இந்துஸ்தான்
டப்பா ஆதிதாளம்
பல்லவி
தேவனே துயர்காலத்
தடைக்கலம்,
தேவனே
சரணங்கள்
1. ஜீவநாயகம்
நம்பெலன்-துணை
காவலே இடர்
காலமதில்-யேசு
- தேவ
2. நேமிதான்[1] நிலை
மாறினும்-மலை
நேசர்
நடுக்கடல் சாய்திடினும்-யேசு
- தேவ
3. வாரியின்[2] ஜலம் கொந்தளித்துப்-பொங்கி
மாதிரம்[3] அதிர்ந் தாலும் அஞ்சேல்;-யேசு - தேவ
4. நாயகன்
அதி காலையில்-துணை
நல்குவார்
மிக நண்புடனே,-யேசு - தேவ
5. ஜாதிகள் மா
கொந்தளித்தே-ராஜ்யம்
தத்தளித் தாலும் அஞ்சிடாதே-யேசு - தேவ
6. சந்ததம் பரன் நம்முடனே-கூடி
சஞ்சரிக்கிறார்;
அஞ்சல் இல்லை;-யேசு - தேவ
7. யுத்தங்கள்
புவி அந்தம் வரை-நீக்கி
உத்தம
சமா தானம்
செய்வார்-யேசு
- தேவ
8. யாக்கோபின்
பரன் ஏற்ற
அடைக் கலம்,
நம்பெலன் துணையும்
அவரே-யேசு
- தேவ
- ச. யோசேப்பு
Comments
Post a Comment