11 June 2024

தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்

தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்

                        தேவ வல்லமை தங்கும் என்றுமே

                        வெற்றி வேந்தர் இயேசுவின் தேவ சக்தியே

                        எந்நாளும் தோன்றிடுதே

 

1.         சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும்

            தேவாதி தேவனே தந்தனரே

            தந்திர மந்திரங்கள் தீமையோ

            முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே

 

2.         பொல்லாத நோய்களும் வேதனையும்

            இயேசுவின் வல்லமை நீக்கிடுமே

            பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு

            வெற்றியுடன் முன்னே செல்லுவோம்

 

3.         பாதாளம் வேதாளம் வென்றவராய்

            வல்லமை தந்தனர் வென்றிடவே

            சாத்தானை மேற்கொண்டு நாமுமே

            வெற்றி வாகை சூடி மகிழுவோம்

 

4.         மாறாத இயேசுவின் வார்த்தையிலே

            வல்லமை அதிகாரம் தங்கினதே

            கர்த்தரின் பிள்ளைகளின் வார்த்தையில்

            வல்லமையும் தங்க வேண்டுமே

 

 

https://www.youtube.com/watch?v=hDlA2zFy60c

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...