தேவன் மரித்தே இவ்வுலகில் உயிர்த்தே
116. இராகம்: மணிரங்கு ஆதிதாளம்
பல்லவி
தேவன்
மரித்தே, இவ்வுலகில்
உயிர்த்தே
விண்ணுக்
கெழுந்தார்,
ஜெயம்! ஜெயம்!
அனுபல்லவி
பாதகர்க்காகப்
பரிந்தவர்
பேச
பரத்துக்கெழுந்தார்,
நயம்! நயம்!-கிறிஸ்து
- பர
சரணங்கள்
1. பன்னிரு
சீடரும் பகைவருங் காண
பதியதற்
கேகினர், ஜெயம்! ஜெயம்!
கிறிஸ்து;-பதி
உன்னத சுவிசேஷம்
உலகினில் கூறியே,
உம்பர[1] மேகினர், நயம்!
நயம்!-கிறிஸ்து;-உம்
2. ஆகமப்
படியே அவனியில்
வந்தே
அனைத்தையும்
முடித்தார், ஜெயம்! ஜெயம்!
கிறிஸ்து;
அ
மேகமீ
தேறி மிகப்புவி
யோர்க்காய்
வேண்டல்
புரிகிறார்,
நயம்! நயம்! கிறிஸ்து;-வேண்
3. மோசே முனிவர்கள்,
முன்னுரை தீர்க்கர்கள்
முதல்வனைத்
தொழுகிறார்,
ஜெயம்! ஜெயம்! கிறிஸ்து-முதல்
ஆசைகொண்டெல்லா
அரூபிகள்[2] கூடி
அமலனைப்
பணிகிறார்,
நயம்! நயம்! கிறிஸ்து;-அம
4. பாவியே,
உனக்காய்ப்
பரிந்தவர்
பேசப்
பரமதற்கெழுந்தார்,
ஜெயம்! ஜெயம்!-கிறிஸ்து;-பர
சாவில்
நின்றுன்னை
மீட்டவர் மோட்ச
தலமதைத்
தருவார், நயம்!
நயம்! கிறிஸ்து-தல
தேவ
- ஜாண் பால்மர்
Comments
Post a Comment