11 June 2024

தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே

தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே

                        வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே

 

1.         சுத்தர்கள் கூடிடும் ஐக்கியமே

            போதனை அறிந்து வாழுவோம்

            துதிகள் பொருத்தனை

            செலுத்தியே மகிழுவோம்

 

2.         சபையின் தலைவர் இயேசுவே

            சபையை நடத்தி செல்லுவார்

            காவல் செய்துமே

            காத்துமே நடத்துவார்

 

3.         பரிசுத்தம் காத்து யாவரும்

            ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே

            எழுந்து கட்டிடுவோம்

            இயேசுவின் சபையினை

           

4.         மகிமை புகழ்ச்சி என்றுமே

            சபையில் அவருக்காய் தோன்றிடும்

            இயேசு உயர்ந்திட

            அவருக்காய் வாழ்ந்திடுவோம்

 

5.         மலைகளை மிதித்து போடுவாய்

            குன்றுகள் பதராய் மாறிடும்

            என்றும் வெற்றியே

            தோல்வியே இல்லையே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...