11 June 2024

தேவன் எனது பெலனானார்

தேவன் எனது பெலனானார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவன் எனது பெலனானார்

                        அரணும் கோட்டையும் துருகமானார்

                        துதியும் பாடலும் கீதமுமானார்

                        நம்பும் தேவனும் இவரானார்

 

1.         பாவமில்லை இனி சாபமில்லை

            இயேசு சிலுவையில் சுமந்தாரே

            வியாதி பெலவீனம் நீக்கினாரே

            விடுதலையும் தந்தாரே

            ஆடிப் பாடி துதித்திடுவோம்

 

2.         துயரமில்லை இனி வருத்தமில்லை

            துக்கமான முகமுமில்லை

            எந்தன் ஜெபத்திற்கு பதில் தந்தாரே

            எதற்குமே இனிமேல் கவலையில்லை

            எழுந்து நாமும் ஜொலித்திடுவோம்

 

3.         இந்த நாளை வாழ்வில் தந்த தேவன்

            நம்மை என்றும் காப்பாரே

            காணும் யாவரும் வியந்திடவே

            அதிசயங்கள் செய்வாரே

            ஆர்ப்பரித்து அகமகிழ்வோம்

 

4.         மூலைக் கல்லாய் நம்மை மாற்றிடுவார்

            ஜீவ சாட்சியாய் நிறுத்திடுவார்

            இயேசு இரத்தத்தால் ஜெயம் பெறுவோம்

            எதிர்ப்போர் எல்லாம் அழிந்திடுவார்

            என்றும் நாமோ நிலைத்திருப்போம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...