01 November 2025

மன்னவன் தோன்றினார் வானம் வாழ்த்திட

மன்னவன் தோன்றினார் வானம் வாழ்த்திட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மன்னவன் தோன்றினார் வானம் வாழ்த்திட

            அன்பின் மைந்தனாய் வையகம் மகிழ்ந்திட

 

                        பாடுவோம் அல்லேலூயா

                        வாழ்த்துவோம் Happy Christmas - 2

 

1.         வார்த்தையாய் இயேசு மண்ணில் தோன்றினாரே

            நிந்தைகள் போக்கி வாழ்வை மாற்றிடவே

            எங்கள் இயேசு பாலனுக்கு ஜெயமே

            உந்தன் அன்பை எந்தன் நாவு பாடுமே

 

            வார்த்தையாம் இயேசு மண்ணில் தோன்றினாரே

            நிந்தைகள் போக்கி வாழ்வை மாற்றிடவே

            சிந்தையை பெரும் அன்பால் நிறைத்திடவே

            சோர்ந்திடும் நேரம் தூக்கி சுமந்திடவே

            அன்பராய் நண்பராய் இயேசுவே பிறந்திட்டார் - பாடுவோம்

 

2.         விண்ணிலே தேவ மேன்மை முழங்கிடவே

            ஞானிகள் எங்கும் தேடி கண்டனரே

            எங்கள் இயேசு பாலனுக்கு ஜெயமே

            உந்தன் அன்பை எந்தன் நாவு பாடுமே

 

            விண்ணிலே தேவ மேன்மை முழங்கிடவே

            ஞானிகள் எங்கும் தேடி கண்டனரே

            வாடிடும் மக்கள் உள்ளம் நிரப்புவாரே

            சோர்ந்திடும் நெஞ்சை தூக்கி நிறுத்துவாரே

            அன்பரை நண்பரை உயர்த்தியே பாடுவோம் -  பாடுவோம்

 

3.         ஆதியில் தேவ வார்த்தை மாம்சமாகி

            நம்மிலே வாழ்ந்து ஜீவ பலியுமாகி

            எங்கள் இயேசு பாலனுக்கு ஜெயமே

            உந்தன் அன்பை எந்தன் நாவு பாடுமே

 

            ஆதியில் தேவ வார்த்தை மாம்சமாகி

            நம்மிலே வாழ்ந்து ஜீவ பலியுமாகி

            சோதனை வென்று மீட்பின் சிகரமாகி

            மீண்டுமாய் வரப்போகும் தேவனையே

            சிந்தைகள் குளிர வாழ்த்தியே பாடுவோம் - மன்னவன்

 

 

- Gladys Rubala

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...