சத்திரத்தின் முன்னணையில்
சத்திரத்தின்
முன்னணையில்
சுத்த
திருமகனாய் பிறந்தார்
இயேசு
பிறந்தார்
இயேசு - 2
1. தூதராம் கேராபீன் சேராபீன்கள்
தூயர்
தூயர் என்று துதிப் பாடிட
ஆயர்
குலத்தின் அன்னை
மரியிடமாய்
தூய
திருமகனாய் அவதரித்தார்
- சத்திரத்தின்
2. சொந்த
மகிமையை இழந்தவராய்
நிந்தை
சுமக்க புவி வந்ததினால்
கந்தை
துணியையும் அணிந்தவராய்
தாழ்மை
ஏழ்மையில் திரு
தியாகியானார்
- சத்திரத்தின்
3. இதயத்தில்
இயேசு பிறந்திடவே
இதயம்
திறந்து படைத்திடுவோம்
உதய
சூரியன் உன்னில்
உதித்திடுவார்
உன்
பாவதோஷம்
நீங்கி துதித்திடுவாய்
- சத்திரத்தின்
4. தன்னை
பலியாக தந்த ஒளி
தம்மை
பணிவோருக்குள்
வீசும் ஒளி
இயேசென்னும்
மகவாய் வந்த ஒளி
இலோகத்தில்
பாவத்தை போக்கும்
ஒளி - சத்திரத்தின்
- Mrs. Violet Aaron (Late)
Comments
Post a Comment