மேக மீதினில் வேகமுடன்
மேக மீதினில்
வேகமுடன்
மேசியா
ஏசுவே வந்திடுவார்
- 2
1. மின்னலைப்
போன்ற பேரொளியில்
மத்திய
வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா
பக்தர்களும்
விண்
தூதசேனை சூழ்ந்திடவே
2. யூதர்கள்
கூடி சேர்ந்தனரே
வேதமும்
நிறை வேறிடுதே
இவ்வடையாளம்
நோக்கிடுவோம்
இயேசுவின்
நாளை சந்திக்கவே
3. தாமதம்
ஏனோ தம் வருகை
தீவிரம்
வந்தால் நம் நிலைமை
கானக
சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக்
காண ஆயத்தமா
4. காலம்
இனியும் சென்றிடாதே
காலையோ
மாலை இராவினிலோ
நாம்
நினையாத நேரத்திலே
நம்மையும்
கர்த்தர் தாம்
அழைப்பார்
5. இந்த
கடைசி காலத்திலே
இப்புவி
இன்பம் தள்ளிடுவோம்
பாரங்கள்
யாவும் நீக்கிடுவோம்
பேரின்ப
இராஜ்யம் சேர்ந்திடுவோம்
6. கண்
விழிப்போடு நாம்
ஜெபிப்போம்
கர்த்தருக்காகக்
காத்திருப்போம்
ஆனந்தமான
நாள் நெருங்க
ஆர்ப்பரிப்போடு
சென்றிடுவோம்
- சாராள்
நவரோஜி
YouTube Link
Comments
Post a Comment