என்
நேசரே எந்தன் மணவாளனே
- (2)
என்ன
நம்புங்கப்பா
உமக்காய் வாழுவேன்
- (2)
1. இவரே
என் சிநேகிதர்
பதினாயிரங்களில்
சிறந்தோர் - (2)
முற்றிலும்
அழகுள்ளவர்
உன்
நேசத்தால் என்னை
இழுத்துக்கொள்ளும்
- 2
என்
நேசர் என்னுடையவர்
நான்
என்றும் உம்முடையவன்
உம்மோடு
யுக யுகமாய்
வாழ நானும் வாஞ்சிக்கிறேன்
- (2)
2. சாரோனின்
ரோஜா
பள்ளத்தாக்கின்
லீலியே - 2
எந்தன்
மணவாளியே
என்
பிரியமே என் ரூபவதியே
என்று
என்னை அழைத்து
என்னை
வர்ணிக்கும்
என் நாயகனே
உம்மையே
சார்ந்து கொண்டு
பரிசுத்தம்
காத்துக் கொண்டு
சீயோனில்
முகமுகமாய்
காண
நானும் வாஞ்சிக்கிறேன்
- 2
- Eva. David Vijayakanth
No comments:
Post a Comment