வான் தூதர் சேனையோடே

வான் தூதர் சேனையோடே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

வான் தூதர் சேனையோடே

நாமும் சேர்ந்தே கவி பாடுவோம் - 2

விண்ணை விட்டுதானே

மனுஷ ரூபமானார்

அன்பிற்கிணை இல்லையே - 2

 

பிறந்தார் பிறந்தார் இரட்சகரே

உதித்தார் உதித்தார் நமை மீட்கவே - 2

 

1. கந்தை கோலமே எளியோனை உயர்த்தவே

கரம் நீட்டியே தூக்கிடுவார்

நன்மையால் முடிசூட்டுவார்

 

அவர் காண்கின்ற தேவனாமே

இருதயம் களிகூர்ந்திடும் - 2 - பிறந்தார்

 

2. விடிவெள்ளி நட்சத்ரமே பாதை காட்டவே

இருள் நீக்கியே ஒளி வீசுவார்

வாக்கை நிறைவேற்றுவார்

 

அவர் இம்மானுவேலாமே

தேவன் நம்மோடு என்றும் உண்டாம் - 2 - பிறந்தார்

 

3. ஈசாயின் அடிவேரே நம் சாபத்தை போக்கிடவே

நேசத்தாலே பாவம் போக்குவார்

பரிசுத்தம் தந்திடுவார்

 

அவர் ஜீவ பலியாமே

நித்திய ஜீவனீவார் - 2 - பிறந்தார்

 

 

- Epsibha

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே