பெத்தலையில் பரமனுக்குக் கொண்டாட்டம்

பெத்தலையில் பரமனுக்குக் கொண்டாட்டம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

பெத்தலையில் பரமனுக்குக் கொண்டாட்டம்

அரமனையில் ஏரோதுக்குத் திண்டாட்டம் - 2

 

கொண்டாட்டம் கொண்டாட்டம் ஊர்முழுக்கக் கொண்டாட்டம்

உற்சாகம் உற்சாகம் எங்கும் உற்சாகம் - 2

 

1. கொட்டும் பனி பார்த்தேன், நான் கோ மகனைப் பார்த்தேன்

கொட்டி வச்சப் பேரழகை கொட்டகையிலே பார்த்தேன்

வெட்டவெளி பார்த்தேன், நான் வெளிச்சம் வரப் பார்த்தேன்

வட்டமிடும் சேனைகளை வயல்வெளியில் பார்த்தேன்

 

குத்திருட்டு வேளையில ஆண்டவர்தானே

குத்துவிளக்காக ஒளி ஈந்தவர்தானே - 2

 

சிற்றூறு கண்டேனே சீரேசு கண்டேனே

விண்ணும் மண்ணும் சேரக் கண்டேனே - பெத்தலையில்

 

2. அக்கரையப் பார்த்தேன் நான் இக்கரையப் பார்த்தேன்

விண்ணவரின் தேனிசையில் சர்க்கரையப் பார்த்தேன்

இரட்சகரைப் பார்த்தேன் நான் இரட்சண்யத்தைப் பார்த்தேன்

இரட்சிப்பென்னும் சந்தோசத்தை இரட்சகராய் பார்த்தேன்

 

நட்டநடு ராத்திரியில் ஆண்டவர்தானே

வந்துதித்தார் சூரியனைப் போன்றவர்தானே - 2

 

தாலாட்டக் கண்டேனே சீராட்டக் கண்டேனே

அன்னை மரி அன்பைக் கண்டேனே - பெத்தலையில்

 

We wish you a merry Christmas

We wish you a Happy Christmas - 2

Wish you a merry Christmas

and a Happy New Year - 2

 

 

- Dr. V.C. Amuthan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே