யாரை நான் அனுப்புவேன்
யாரை
நான் அனுப்புவேன்?
யார்
போவார் என் காரியமாய்?
என்ற
உம் குரல் கேட்குதய்யா
(2)
போகிறேன்
உம் காரியமாய்
- நான் (2)
1. கண்கள்
இருந்தும் குருடர்களாய்
காதுகள்
இருந்தும் செவிடர்களாய்
உள்ளம்
இருந்தும் ஊமைகளாய்
வாழ்கின்ற
ஜனத்தை மீட்டிடவே
(2)
2. பணம் இருந்தும்
பாமரராய்
பட்டம்
இருந்தும் மூடர்களாய்
இரட்சகர்
இருந்தும் பாவிகளாய்
வாழ்கின்ற
ஜனத்தை மீட்டவே
(2)
3. காணாமற்
போன ஆடுகளாய்
தொலைந்து
போன பாவிகளாய்
தகப்பனை
இழந்த பிள்ளைகளாய்
தவிக்கின்ற
ஜனத்தை மீட்டிடவே
- Pr .A. Johnraj (Ambur)
Comments
Post a Comment