ஈராயிரம் ஆண்டுகள் முன்
ஈராயிரம்
ஆண்டுகள் முன்
பெத்லேகம்
என்னும் ஊரிலே
கன்னிமரி
மகனாக
இயேசு
பாலகன் பிறந்திட்டார்
- 2
கொண்டாடுவோம்
நம் இயேசு பாலன்
பிறந்தார்
பண்
பாடுவோம் நம் மீட்பர்
மண்ணில் பிறந்தார்
- 2
1. விண்ணக
தூதர்களும்
மகிழ்வுடன்
செய்தி சொல்ல
- 2
மந்தையின்
மேய்ப்பர்கள்
செய்தியை கேட்டு
தேவனை
துதித்தனர் - கொண்டாடுவோம்
2. வானில்
ஓர் நட்சத்திரம்
கிழக்கில்
தோன்றிடவே - 2
ஞானிகள்
பின்சென்று காணிக்கை
படைத்து
பாலனை
பணிந்தனர் - கொண்டாடுவோம்
3. இருளான
உலகத்தினில்
ஒளியாக
வந்தவரே - 2
பரலோக
மேன்மைகள் எமக்கு
தந்திட
தாழ்மையாய்
உதித்தீரே - கொண்டாடுவோம்
- D. Joyel Singh
Comments
Post a Comment