மோட்ச வீட்டை நான்

மோட்ச வீட்டை நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

மோட்ச வீட்டை நான்

என்று சேர்வேன் தூயா தூய தேவா

 

அல்லேலூயா தொனி கேட்குதே

அங்கே சென்று நானும் பாடுவேன்

 

1. பொற் தள வீதியில் உலாவுவேன்

பொன் மாளிகையில் நான் தங்கிடுவேன்

முள்முடி சூட்டின இயேசுவை

பொன் முடி சூட்டி நான் போற்றிடுவேன்

 

2. கண்ணீர்கள் யாவும் கர்த்தர் தாமே

கனிவுடன் கரத்தால் துடைப்பார்

நல்ல போராட்டம் என் ஓட்டமும்

நலமுடன் ஓடி முடித்திடுவேன்

 

3. புதிய எருசலேம் வாசல்கள்

பூரிப்புடன் கரத்தால் துடைப்பார்

எண்ணில்லா பக்தர்கள் தூதர்கள்

என்னரும் இயேசுவையும் காணுவேன்

 

4. கல்லறை தோட்டம் அங்கே இல்லை

குறுகின ஆயுசுள்ளோர் அங்கில்லை

சாவு பவனி அங்கு இல்லை

சஞ்சலம் பஞ்சமும் அங்கே இல்லை

 

5. புவி யாத்திரை முடியும் போது

பரதீசில் சென்றிளைப்பாறுவேன்

எக்காளம் தொனிக்கும் நேரத்தில்

எழும்பி என் பங்கை நான்

பெற்றிடுவேன்

 

6. ஜீவ புஸ்தகம் திறந்திடும்

ஜீவ தேவன் என்னை கூப்பிடுவார்

ஜீவனுள்ளோர் தேசத்தில் நடப்பேன்

நல்ல போராட்டம் என் ஓட்டமும்

நலமுடன் ஓடி முடித்திடுவேன்

 

 

- சாராள் நவரோஜி

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே