20 November 2025

மேக ஸ்தம்பமே என்னை வழிநடத்தும்

மேக ஸ்தம்பமே என்னை வழிநடத்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

மேக ஸ்தம்பமே என்னை வழிநடத்தும்

அக்கினி ஸ்தம்பமே என்னை சுத்திகரியும்

ஆவியானவரே என்னை அபிஷேகியும்

அப்பா பிதாவே உம்மை அண்டிக் கொள்வேன்

 

நீரே என்னை தேற்றும்

நீரே என்னை மாற்றும்

நீரே என்னை நடத்தும் இயேசு ராஜனே

 

1. காற்றடிக்கும் முழக்கம் போல் வேகம் வந்தீரே

கன்மலையாம் கிறிஸ்து என்னை கருவில் கண்டீரே

கரைந்திடும் உள்ளமெல்லாம் உம் நினைவே

கண்டிடும் நேரம் வரை காத்திருப்பேன்

 

2. ஆத்துமா என்றும் உம்மை வாஞ்சிக்கின்றதே

தாகத்தினால் உள்ளம் என்னில் ஏங்கிடுதே

சந்ததி மேல் உமது ஆவிதனை

தயவாய் இன்றே ஊற்றிடுமே

 

3. ஆவிக்கு மறைவாக எங்கே செல்லுவேன்

சமூகத்தை விட்டு நான் எங்கே ஓடுவேன்

என்னையும் உயிர்ப்பிக்கும் வல்ல தேவனே

உம்மோடு நித்திய காலம் சேர்ந்திடுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...