மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி
1. மேலோகத்தாரே
புகழ்ந்து போற்றி
சாலோசையாய்த்
துதித்துப் பாடுங்கள்
ஓயாத
அல்லேலூயா!
2. ஓயா ஒளிமுன் நிற்கும்
சேனையே
ஆர்ப்பரித்து
ஒய்யார தொனியாய்
ஓயாத
அல்லேலூயா!
3. மாட்சிமையான
பாடல் தொனிக்கும்
ஆட்சி செய்யும்
ராஜாவை வாழ்த்திடும்
ஓயாத
அல்லேலூயா!
4. கிறிஸ்தேசுவின்
முன் ஓசை எழும்பும்
சதா காலமும்
புகழ் மகிமை
ஓயாத
அல்லேலூயா!
Comments
Post a Comment