மோட்ச பேரின்ப பாக்கியங்கள்

மோட்ச பேரின்ப பாக்கியங்கள் அறிவுக்கெட்டா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

345. இராகம்: சுருட்டி அடதாள சாப்பு

 

பல்லவி

 

மோட்ச பேரின்ப பாக்கியங்கள்-அறிவுக்கெட்டா

ஆச்சரியமாம் யோக்கியங்கள்;

 

அனுபல்லவி

 

காட்சி வளர் கடவுள் மாட்சிமையின் பிரதாபம்

காண அமரர் கண்கள் நாணும்; அதுவோ வேணும் - மோட்ச

 

சரணங்கள்

 

1. கண்களுக் கடங்கா நிதியும்-பளிங்கைப்போல

கலந்து பாய்கின்ற நதியும்.

விண்ணவர்கள் கெம்பீரம், வெற்றியின் ஆரவாரம்;

அண்ணல் கிறிஸ்து வீரம் ஆர் உரைப்பார் இந்நேரம்? - மோட்ச

 

2. நித்திய சங்கீர்த்தனங்களும்; சீயோனுக்கும்

நிமலர்க்கும் மங்களங்களும்

சுத்த பளிங்குமேடை, ரத்ன கசித ஆடை,

சுக பரிமள வாடை, சுதந்தரர் ஆவதோடே - மோட்ச

 

3. அறிவைக் கடந்த சுகங்கள், உட்டணம்[1] வெயில்

அணுவும் இல்லாத நிகங்கள்,

செறியும் சுத்த சுகங்கள், திவ்ய மகா பதங்கள்,

பரவு பேரின்பங்கள், பதியை நோக்குவோம் எங்கள் - மோட்ச

 

4. பயங்கள் திகில்கள் ஏது? பரிசுத்தர்கள்

பாடி மகிழும்போது,

ஜெயம்! ஜெயம்! என்று காத்ர திரித்துவத்துக்கு மாத்திரம்

மயநசரேயர் கோத்திரம் மகிழ்ந்து சொல்வோமே தோத்திரம் - மோட்ச

 

 

- சவரிமுத்து உபாத்தியாயர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] வெப்பம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே