04 November 2025

எங்கப்பா போவேன் உங்க பிரசன்னத்தை விட்டுட்டு

எங்கப்பா போவேன் உங்க பிரசன்னத்தை விட்டுட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          எங்கப்பா போவேன் உங்க பிரசன்னத்தை விட்டுட்டு

            எப்படி வாழுவேன் உங்க சமூகத்தை மறந்து - 2

 

                        அப்பா நீங்க எனக்கு இருக்க பயமில்லையே

                        என் தகப்பன் நீங்க சுமந்து கொள்ள கலக்கமில்லையே

                        நீங்க போதும், நீங்க போதும், நீங்க போதும் - (2) - எங்கப்பா

 

1.         எதிர்பார்த்த உறவுகள் எதிர்த்து நின்றாலும்

            கை கோர்த்த உறவுகள் விலகி சென்றாலும் - 2

            எப்ராயிம் என்னை நீர் கைவிடுவீரோ

            இஸ்ரயேல்  என்னை நீ மறந்திடுவீரோ - 2 - அப்பா நீங்க

 

2.         நிந்தைகளும், அவமானங்களும் சூழ்ந்து நின்றாலும்

            கண்ணீரே எனக்கு தினம் உணவானாலும் - 2

            கண்ணின் மணி என்னை காத்திடுவீரே

            உன் கரத்தின் நிழலுக்குள் என்னை மறைத்து கொள்வீரே - 2 -  அப்பா நீங்க

 

3.         தனிமையும் வெறுமையும் துணையானாலும்

            பயங்களும், கலக்கங்களும் சூழ்ந்து கொண்டாலும் - 2

            உள்ளங்கையில் வரைந்தென்னை காத்திடுவீரே

            மார்போடு சேர்த்தென்னை அணைத்திடுவீரே - 2 - அப்பா நீங்க

 

 

Lyrics: From the scriptures based on the personal experiences

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...