பிறந்தார் பிறந்தார் இறைமகன் இன்று பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இறைமகன் இன்று பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பிறந்தார் பிறந்தார்

          இறைமகன் இன்று பிறந்தார்

            பிறந்தார் பிறந்தார்

            இம்மானுவேலன் பிறந்தார் - 2

 

                        Wish you Marry marry Christmas - 4

 

1.         உதயத்தின் ஒளி நம் இதயத்தில் வந்தார்

            அகிலத்தை மீட்டிட பிறந்தார்

            அன்பெனும் சுடராய்

            தந்தையின் திருமகன்

            எங்களை தேடி வந்தார் - 2

 

            பெத்தலை நகரில் மாடடை குடிலில்

            மானிட உருவில் பிறந்தார்

            வானவர் பாடிட மேய்ப்பர்கள் மகிழ்ந்திட

            ஞானிகள் பணிந்திட பிறந்தார்

            கிறிஸ்தேசு பாலனாய் பிறந்தார் - பிறந்தார்

 

2.         ஆதியின் பாவ சாபத்தை போக்கிட

            சத்திய ஜோதியாய் வந்தார்

            நித்திய வாழ்வை மாந்தர்கள் பெற்றிட

            திரித்துவ தேவன் பிறந்தார் - 2

 

            பெத்தலை நகரில் மாடடை குடிலில்

            மானிட உருவில் பிறந்தார்

            வானவர் பாடிட மேய்ப்பர்கள் மகிழ்ந்திட

            ஞானிகள் பணிந்திட பிறந்தார்

            கிறிஸ்தேசு பாலனாய் பிறந்தார் - பிறந்தார்

 

 

- Jonah Bakthakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே