01 November 2025

ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே

            ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்

            ஆட்டுக்குட்டியானவரே ஆட்டுக்குட்டியானவரே

            ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர் - 2

 

                        உமக்கே எங்கள் ஆராதனை - 2

 

1.         பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர் - (2)

            நீதிமானாக என்னை மாற்றினீர் - (2)

            கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே - (2)

            சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே - (2) - ஆட்டுக்குட்டியானவரே

 

2.         கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர் - (2)

            ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர் - (2)

            ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் - (2)

            சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே - (2) - ஆட்டுக்குட்டியானவரே

 

3.         ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே - (2)

            எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே - (2)

            செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால் - (2)

            சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே - (2) - ஆட்டுக்குட்டியானவரே

 

4.         என் பாவம் யாவையும் உம் உடலிலே சுமந்தீரே - (2)

            உம் சுகத்தை என் உடலில் தந்தீரே - (2)

            பாவத்தில் விளைவுகளை உம் மரணத்தால் வென்றீரே - (2)

            காயங்களால் நான் சுகமானேனே - உம் - (2) - ஆட்டுக்குட்டியானவரே

 

5.         வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும்

            மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே - (2)

            இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே - எங்கள் - (2)

            எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே - (2) - ஆட்டுக்குட்டியானவரே

 

 

- Dr. Joseph Aldrin

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...