03 November 2025

அழகான நாழிகைதான்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அழகான நாழிகைதான்

                        குடில்கூட மாளிகைதான்

                        சேனை பாடிடுதே

                        மகிழ்ந்தாடிடுதே

                        மண்ணில் இயேசு பாலகன்தான்

 

1.         வீசும் காற்றில் கனிகள் விழும்

            புல்லின் மீது பனிகள் விழும் - 2

            பாலன் காதில் இசைகள் விழும் - (2)

            தூதர் பாட்டில் துதிகள் எழும் - (2)

 

                        இது சின்ன ராத்திரி

                        விண்மீன் மின்னும் ராத்திரி

                        இனிதான வண்ண ராத்திரி - 2 - அழகான

 

2.         வெள்ளைப் பூக்கள் சிரிக்கிறதே

            வெண் புறாக்கள் பறக்கிறதே - 2

            மண்ணில் தோன்றும் சமாதானமே - (2)

            மாந்தர் மீது பிரியம்தானே - (2)

 

                        இது சின்ன ராத்திரி

                        விண்மீன் மின்னும் ராத்திரி

                        இனிதான வண்ண ராத்திரி - 2 - அழகான

 

3.         வானம் வாசல் திறந்ததுவே

            தேவ கானம் பிறந்ததுவே - 2

            வார்த்தை மாம்சம் ஆகியதே - (2)

            வாழ்க்கை ஜோராய் மாறியதே - (2)

 

                        இது சின்ன ராத்திரி

                        விண்மீன் மின்னும் ராத்திரி

                        இனிதான வண்ண ராத்திரி - 2 - அழகான

 

 

- Dr. V.C. Amuthan

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...